மனைவியின் சகோதரன் கோடரியால் தாக்கி கொலை ; கணவர் கைது

108 0

மது போதையில் தனது மனைவியை தாக்கிய சகோதரனை கல் மற்றும் கோடரியால் தாக்கி கொலை செய்த கணவர் தெஹியோவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய நபராவார்.

குறித்த சம்பவத்தின் போது, உயிரிழந்தவர் மது போதையில் வீட்டிற்கு வந்த நிலையில் தனது சாகோதரியை தாக்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது கணவர் மனைவியின் சகோதரனை கோடாரி மற்றும் கல்லால் பலமாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.