பொலிஸாரை பயமுறுத்துவதற்காக நாயுடன் காரில் கடத்திச் செல்லப்பட்ட ஐஸ் போதைப்பொருள்

120 0

பொலிஸாரைப் பயமுறுத்துவதற்காக நாயுடன் காரில் கடத்திச் செல்லப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு கைத்தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் கிரிவத்துடுவ யகஹலுவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிரிவத்துடுவ யகஹல்வ பிரதேசத்தின் ஊடாக ஐஸ் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின்  பணிப்புரையின்பேரில் அதிகாரிகள் குழுவொன்று கிரிவத்துடுவ யகஹலுவ பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.