பொரளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சகோதரர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் தனது சகோதரனை கத்திரிகோலால் குத்தி கொலை செய்த மூத்த சகோதரன் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 8 , பொரளை, சர்பன்டைன் வீதியை சேர்ந்த 55 வயதுடைய ஐ. எச் . ஜயந்த என்ற நபராவார்.
சந்தேக நபர் மது போதையில் இருக்கும் போது சகோதரருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தகராறின் போது மூத்த சகோதரன் இளைய சகோதரனின் மார்பின் இடது பக்கத்தில் கத்திரிகோலால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.