மதுபோதையில் காரைச் செலுத்தி மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்துக்குள்ளாக்கிய நால்வர் கைது

139 0

மது போதையில் காரை செலுத்தி இரு மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற சாரதி உட்பட 4 பேர் பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது சந்தேக நபர்கள் திருமண நிகழ்வென்றில் கலந்துகொண்டு மதுபோதையில் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது கொழும்பு – கண்டி வீதியில் களனி பிரதேசத்தில் வைத்து 2 மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் வத்தளை – ஹேகித்த பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.