போன்று தொலைப்பேசியூடாக உரையாடி பண மோசடியில் ஈடுபடும் கும்பல்!

83 0

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பல வீடுகளிலுள்ள தொலைப்பேசிகளுக்கு அழைப்பெடுத்து, தம்மை பொலிஸார் எனக் கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முற்படும் கும்பலொன்று தலைமறைவில் இயங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, முல்லேரியா, நவகமுவ பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு இதுபோன்ற அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் எனக் கூறி பணம் பறிக்க அழைப்பு விடுக்கப்படுவது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

இக்குழுவினர் ஏனைய பகுதிகளிலுள்ள வீடுகளுக்கும் இவ்வாறு அழைப்புகளை மேற்கொண்டு மோசடிகளில் ஈடுபட வாய்ப்புண்டு.

மோசடியில் ஈடுபடும் இந்த கும்பலிடம் சிலர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நம்பி ஈஸி கேஷ் (ez cash) மூலம் பணத்தை செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று காட்டிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி, பண மோசடியில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு கைதுசெய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகவே, இவ்வாறான மோசடிக் கும்பல்களின் வலைகளில் சிக்கிக்கொள்ளாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.