பௌத்த மதத்தை அவமதித்தமை தொடர்பில் விமல புத்தி மீண்டும் கைது

91 0

பௌத்தர்களையும் பௌத்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் இரத்தினபுரியைச் சேர்ந்த விமல புத்தி கணனி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவினர் இரண்டாவது தடவையாக நீதிமன்றில் செய்த முறைப்பாட்டின் பிரகாரமே விமல புத்தி கைது செய்யப்பட்டுள்ளார் .

விமல புத்தி ஏற்கனவே ஒருமுறை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பௌத்தர்களையும் பௌத்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை இணையத்தில் வெளியிடுட்டு  மக்களை தூண்டும் வகையில் இவருடைய நடவடிக்கைகள் இருந்ததன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.