கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளை பறவைகள் வாழிடமாக அரசு அறிவிக்க வேண்டும்

101 0

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த அவருக்கு கோர்ட்டு தடை விதித்து இருப்பதால் கடுமையான பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.சட்டரீதியிலான அனைத்து போராட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமியிடம் தோல்வி அடைந்த அவர் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி சமீபத்தில் அவர் கோவையில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கி நடத்தினார்.முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்தார்.

இந்த நிலையில் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த அவரது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் மேலும் பின்னடைவை சந்தித்தார்.என்றாலும் மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கைகோர்ப்பதற்கு தனது சுற்றுப்பயணம் மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

அந்த வகையில் தனது 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ளார். திண்டுக்கல்லில் இருந்து அவர் பயணத்தை ஆரம்பிக்கிறார்.தென் மாவட்டங்கள் மற்றும் மீதமுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்து நிறைவு செய்ய உள்ளார். அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதிக்குள் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வார் என்று அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.அந்த ஆதரவாளர் மேலும் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சற்று பின்னடைவுதான். என்றாலும் மூல வழக்கு சிவில் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம் ” என்றார்.