முஸ்லிம்களுக்கு இருக்கும் உணர்வு கூட சில பௌத்தர்களுக்கு கிடையாது – மஹிந்த

273 0

தலதா மாளிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கு இருக்கும் உணர்வு கூட சில பௌத்தர்களுக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிரம விமலஜோதி தேரரின் 70ம் பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

தலதா மாளிகைக்கு எதிரில் அமைந்துள்ள வீதியை திறப்பதற்கு முயற்சித்த போது முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர் ஒருவரே அதற்கு முதலில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தலதா மாளிகை தொடர்பில் முஸ்லிம் சகோதரர்களுக்கு இருக்கும் உணர்வு கூட சில பௌத்தர்களுக்கு இல்லாமலிருப்பது வருத்தமளிக்கின்றது.

பௌத்த மதம் இழிவுபடுத்தப்படும் ஓர் நிலைமை உருவாகியுள்ளது.இதன் காரணமாகவே சில் ஆடைகளும் இன்று நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எமது ஆட்சிக் காலத்தில் தலதா மாளிகைக்கு எதிரில் பாதையை மூடியிருந்தோம். இதனால் மக்கள் சில மைல்கள் நடக்க வேண்டியிருப்பது எமக்கு தெரியும்.

வீதியை திறந்தால் இறைச்சிக்கடைகாரரும், லொறிகளும், பஸ்களும் ஏனையவையும் தலா மாளிகைக்கு எதிரில் செல்ல நேரிடும்.

வீதி திறந்திருந்த காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த வீதி திறக்கப்படக் கூடாது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளா