உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றார் வள்ளுவப் பெருந்தகை. ஒப்பற்ற விழா தான் பொங்கல் திருநாள். இதுதான் தமிழர் பெருநாள்.
உழவு என்பது தமிழர்களின் தொழிலாக இல்லாமல் பண்பாட்டு மரபாக இருந்தது. அதனால் தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வரும் திருவிழாவாக பொங்கல் இருக்கிறது.
தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக தமிழர் பெரு நாளாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
“ஆண்டுக்கோர் நாள், அருமை மிகு திருநாள் பொங்கல் புதுநாள் இதற்கு ஒப்பான விழா உலகில் எங்கும் இல்லை “ என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா
களம் காண்பான் வீரன் என்றால்-நெற்களம் காண்பான் உழவன் மகன்.
போர் மீது செல்லுதலே வீரன் வேலை-வைக்கோற்போர் மீது உறங்குதலே உழவன் வேலை.
பகைவர் முடி பறித்தல் வீரன் நோக்கம்-நாற்றுமுடி பறித்தல் உழவன் நோக்கம்.
உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு;
ஒப்பற்ற விழா தான் பொங்கல் திருநாள். இதுதான் தமிழர் பெருநாள்.
அன்பு பொங்க,
ஆசை பொங்க,
இன்பம் பொங்க,
ஈகை பொங்க,
உண்மை பொங்க,
ஊரே பொங்கட்டும்.
இனிய பொங்கலாக மாறப் போகும் ஆண்டு இது.
அனைவருக்கும் குறியீடு இணையத்தின் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.