மட்டக்களப்பில் சனிக்கிழமை (13) பகல்நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் திருமலை மாவட்டத் தலைவருமான கதிர் திருச்செல்வம், பொருளாளர் க.சிறிஸ்கந்தராஜா ஆகியோரும் இணைந்திருந்தனர்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த நாட்டில் வாழுக்கின்ற தமிழ் பேசும் சமூகங்கள், அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளாகியிருக்கின்றதும், நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருப்பதும் அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் ஈரேஸ் ஜனநாயக முன்னணியும் ஒரு பொறுப்புவாய்ந்த அரசியல் கட்சியாக பொறுப்புவாய்ந்த அரசியல் கட்சியாக தமிழ் பேசும் சமூகங்களின் உரிமைசார்ந்நத விடயங்களில் கடந்த 9 வருடங்களாக எங்களுடைய செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறோம்.
எங்களுடைய அரசியல் செயற்பாட்டில் திருப்தியடைந்த தேர்தல் ஆணைக்குழு கடந்த 2022ஆம் ஆண்டு ஈரேஸ் ஜனநாயக முன்னணியை இலங்கையில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்தது. அந்த வகையில் நாம் இன்னும் சிறிது காலத்தில் எமது கட்சியின் தேசிய மகாநாட்டைக் கூட்டவிருக்கிறோம். அந்த வகையில் தேசிய மகாநாட்டின் ஊடாக தமிழ் பேசும் சமூகங்களுக்குச் செய்யக் கூடிய அரசியல் பணிகளையும், செயற்பாடுகளையும் நாம் விரிவாக ஊடகங்களுக்கூடாகத் தெரிவிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
ஆகவே இந்த நாட்டில் இருக்கின்ற வடக்கு கிழக்கு, மலையகத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈரேஸ் ஜனநாயக முன்னணி தன்னுடைய காத்திரமான அரசியல் பணியை எதிர்காலத்தில் மிக வீரியமாக முன்னெடுக்கும்.
நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாதத் தடைச்சட்டமே, தமிழ் பேசும் மக்ளுக்கும் இலங்கை மக்களுக்கும் பெருத்த நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கையில் புதிதாக அதனைவிடவும் மோசமான சட்டத்தை இலங்கையில் கொண்டுவருவது என்பது இந்த மக்களது ஜனநாயக உரிமையை மீறுவதாகவும் அந்த மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும் இருக்கும்.
இவ்வருடத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள மாகாநாட்டில் முடிவு செய்யப்படவுள்ளது.
அரசாங்கத்தினுடைய வரி அதிகரிப்பானது ஒட்டுமொத்த மக்களையும் எதிரான கருத்துடையவர்களாக ஆக்கியிருக்கிறது. மக்கள் மீது மேலதிக சுமையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த சுமையைக் குறைப்பதற்கான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை கொடுக்கவேண்டும். அவர்களுக்கான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி செயற்படும்.
முக்கள் விரோத செயற்பாடுகள் ஆட்சியாளர்களோ வேறு யாரோ செய்கின்ற வேளை இந்த சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் இவ்வாறான செயற்பாடுகளைக் கொண்டு செல்கின்றன. ஆகவே இந்த சமூக ஊடகங்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்படுகின்ற இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தினை நாங்கள் எதிர்க்கிறோம். என்னவென்றால் மக்களுடைய நிகழ் நிலை காப்புச் சட்டம் பறிக்கின்றது. இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடனான செயற்பாட்டில் எமது முன்னணியும் ஈடுபடும்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதென்பது முக்கியமான விடயம். எழுந்தமானமாக அதற்கான பதிலை கூறிவிடமுடியாது. ஈரோஸ் ஜனநாயக முன்னணி என்பது ஒரு கூட்டுச் செயற்பாட்டையடைய அமைப்பு. பொதுக்குழுவில் ஆராய்ந்து இவ்விடயம் தொடர்பாக கட்சியின் தேசிய மகாநாட்டிலே நாங்கள் அறிவிக்கவிருக்கிறோம்.
அதே நேரத்தில் வடக்கு, கிழக்கு, மலையத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைப்பது தொடர்பாகவும், மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏனைய முற்போக்கு அரசியல் சக்திகளோடும், தென்பகுதிகளோடு இருக்கின்ற முற்பொக்கு சக்திகளோடும் இனைந்து கொண்டு தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பது பற்றியும் சமூகம் சார்ந்த அனைத்து விதமான கேள்விகளுக்குமான பதிலை எமது தேசிய மகாநாட்டின் மூலமாக பகிரங்கப்படுத்தவுள்ளோம்.
இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்கின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கப் போவதாக தேர்தல் காலம் வரும் போது முன்வைப்பதாக அறிவிப்பது கடந்த காலங்களில் நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று. இது ஒரு தேர்தல் கால செயற்பாடாக இல்லாமல் அர்ப்பணிப்போடு தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் துpரப்பதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்போடும் நேர்மையோடும் செயற்பட வேண்டும்.
அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதான அறிவிப்பு இதற்குள் வந்துவிடக்கூடாது
கடந்த காலங்களில் நாட்டை ஆட்சி செய்திருக்கின்ற அரசாங்கம் தமிழ் மக்கள் சார்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றியதாக வரலாறில்லை. இனிமேலாவது அதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
50 ஆண்டு வரலாற்றைக் கொண்ட ஒரு அமைப்பு 1975ஆம் ஆண்டு இதன் நிறுவனரான இரட்ண சபாபதி அவர்களுடைய எண்ணத்தில் உருவான ஈரோஸ்அமைப்பு 1987ஆம் ஆண்டுவரை ஒரு ஆயுதப் போராட்டக் களத்தில் தமிழ் மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டதொரு அமைப்பு. 87க்குப்பின்னர் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டு எங்களால் முடிந்த அரசியல் பணியைச் செய்து கொண்டிருக்கின்றோம். இந்த வகையில் 2015ஆம் ஆண்டு ஈரோஸ் ஜனநாயக முன்னணியை பிரகடனப்படுத்தியிருந்தோம். அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மலையகத்தில் மக்களின் ஆதரவு பெற்ற அரசியலமைப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது.
இந்த நேரத்தில் ஆரம்ப காலத்திலிருந்து ஈரோஸ் அமைப்புடன் இணைந்திருந்த அத்தனை தோழர்களுமு; ஈரோஸ் ஜனநாயக முன்னணியோடு தங்களை இணைத்துக் கொள்ளுமாறு ஒரு பகிரங்க அழைப்பினை விடுக்கிறோம். அத்தோடு எங்களுடைய அரசியல் செயற்பாட்டுக்கு இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சமூகங்களும ;தங்களுடைய ஒத்துழைப்புகளை நல்க வேண்டும்.