தைப்பொங்கல் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடவுள்ள இந்நிலையில் மட்டக்களப்பில் வர்த்தக நிலைங்கள் மற்றும் பொதுச் சந்தைகளில் வியாபாரம் சூடுபிடித்தன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, களுதாவளை, கல்லாறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
புத்தாடைகள், பட்டாசு, பொங்கலுக்குரிய பொருட்கள், பானைகள், உள்ளிட்ட பல பொருட்களைக் கொள்வனவு செய்தனர் .
இந்நிலையில் பொருட்களுக்கு அதிக விலையேற்றம் காரணமாக, கடந்த வருடத்தை விட மக்கள் அதிகளவு பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபாடு காட்டுவது குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் விலைகளும் வெகுவாக உயர்ந்துள்ளதாகவும். மக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதாக களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை மரக்கறி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது .
மன்னார்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில் வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றன .
மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் மன்னார் மாவட்டத்தில் வீதிகள் மற்றும் விற்பனை நிலையங்களின் வியாபார நடவடிக்கைகள் குறைவடைந்தே காணப்பட்டன.
ஒரு சில கடைகளில் மாத்திரம் கரும்புகளையும் பொங்கல் விற்பனை பொருட்களையும் மக்கள் கொள்வனவு செய்தனர் .