குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் மிதிகம ருவன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சகோதரி ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் எனவும் அவர் மிதிகம ருவன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சகோதரி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களும் புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.