சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் நடன ஆசிரியர் ஒருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பெலன்வத்தை பகுதியில் பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனை நடன ஆசிரியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.
தமது நண்பரின் வீட்டைக் கண்டுபிடிக்க உதவுமாறு சிறுவனிடம் இதன்போது கோரியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் சிறுவனின் கையை பிடித்து தமது அந்தரங்கப் பகுதிக்கு கொண்டு சென்று சிறுவனை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் சிறுவனுடன் பயணித்த விதம் சிசிடிவி கெமெராவில் பதிவாகியுள்ளதுடன், வீதியொன்றுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து அவர் எரிபொருள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்தை விட்டு வெளியேறிய சந்தேகநபர், மோட்டார் சைக்கிளை வெறிச்சோடிய வீதியை நோக்கி செலுத்த முற்பட்ட நிலையில் அச்சமடைந்த சிறுவன் அலறியதால் அவரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து 27 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடன வகுப்பொன்றை நடத்தி பல சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட நடன ஆசிரியரின் பிரதான உதவியாளர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.