வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களுக்கு மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
“பொது வாகனங்களை இறக்குமதி செய்ய வர்த்தமானி வெளியிடப்படவில்லை. சில அரச நிறுவனங்களின் சில அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக சில வாகனங்களை கொண்டு வாருவதற்கே வர்த்தமானி வௌியிடப்பட்டது. மேலும் வெளிநாட்டு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதே வெளிநாட்டு உதவியில் கிடைக்கும் பணத்தில் கொண்டு வரப்படுகிறது. உதாரணமாக. , கல்வி அமைச்சுக்கு இரண்டு பேருந்துகள் வெளிநாட்டு திட்டங்களின் கீழ் கிடைக்கின்றன. சுகாதார அமைச்சுக்கு 21 இரட்டை கெப் வண்டிகள், அதேபோன்று நடமாடும் மகப்பேறு மருத்துவ மனைகளுக்கு 03 வாகனங்கள், தொழிலாளர் அமைச்சுக்கு ஒரு வாகனம்.
மேலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு 03 வாகனங்கள் மாத்திரமே. இவை அரசு நிறுவனங்களுக்கு அத்தியாவசியமானவை. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் உள்ள மற்ற வாகனங்கள் அனைத்தும் வெளிநாட்டு உதவி மூலம் கிடைத்த பணத்தை பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது” என்றார்