காத்தான்குடியில் 15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய 3 பேர் கைது

101 0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசமொன்றில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேரை  ஞாயிற்றுக்கிழமை (07) பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை 6ஆம் திகதி 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் வீடொன்றுக்கு  வரவழைத்துள்ளார்.

அங்கு அவரின் நண்பர்கள் இருவர் உட்பட 3 பேர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து காத்தான்குடி பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி கஜநாயக்க தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இருவரும் 32 வயதுடைய ஒருவரும் என 3 பேரை நேற்று கைது செய்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்தில் கைதானவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.