குறித்த வழக்கானது நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக் கொண்டபோதே இவ் வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மன்றில் ஆயராகிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சாள்ஸ் நிர்மில நாதன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், சிவில் அமைப்பினர்கள், வேலன் சுவாமிகள், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆயராகியிருந்தனர்.
குறித்த வழக்கில் சட்டத்தரணியாக மன்றில் ஆயராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.டி.தவராஜா உடன் இருந்தார்.இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பொலிஸாரின் மேலதிக விசாரணைக்காக சட்டமா திணைக்களத்தின் ஆலோசனை பெறவுள்ளதாக மன்றில் பொஸிஸார் கூறியிருந்தனர். அதற்கான விண்ணப்பம் ஒன்றினை மன்றில் நான் சட்டத்தரணியாக சமர்ப்பித்திருந்தேன்.
இந்த வழக்கில் ஈட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு விண்ணப்பம் செய்து இருந்தேன். அதனை கேட்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஆனந்தராஜா வழக்கினை கிடப்பில் போட்டு சகலரையும் விடுதலையாக்கினார் – என்றார்.