நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (08) நீதியமைச்சில் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கச் சட்டமூலங்கள் தொடர்பாக நீதி அமைச்சர் மற்றும் அமெரிக்கத் தூதுவர் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தேவையான திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வெளிவிவகார அமைச்சின் ஊடாக அரச அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் இங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.