மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு காய்ச்சல்; மிக வேகமாகப் பரவிவருவதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.நஸீர்தீன் தெரிவித்தார்.
இதன்படி, நேற்றைய தினம் மாத்திரம் 50 டெங்கு நோளாளர்கள் வைத்தியசாலைகளில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவாரங்களில் ஒருவர் மரணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் 4 நாட்களில் காத்தான்குடி பிரதேசத்தில் 4137 வீடுகளில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 223 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 49 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச பெர்சுகாதார பரிசோதகர் எஸ்.மிதுன்ராஜ் தெரிவித்தார்.
இராணுவத்தினர் காவல்துறையினர் மற்றும் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் இணைந்து இந்த நடடிவக்கைகளில் ஈடுபட்டனர்.
பிரதேசமெங்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.