ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடல் பரப்பில் வைத்து நேற்று இரவு அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 13.5 கிலோ கிராம் போதை பொருளும் அவர்கள் பயணம் செய்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில் மேலதிக விசாரணைகளின் பொருட்டு, குறித்த போதை பொருள் மற்றும் சந்தேகநபர்கள், காவல்துறையினர் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.