இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மெக்கேசர் விளையாட்டு திடலில் நேற்று இடம்பெற்ற தேசிய இளையுர் மாநாட்டில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டிற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.
நேற்று இடம்பெற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த இளைஞர் மாநாடு முதல் தடவையாக கிழக்கில் இடம்பெறுகின்றது என குறிப்பிட்டார்.
இது தேசிய நல்லிணக்கத்தின் எடுத்து காட்டாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை இளைஞர்களுக்கு வழங்குவது ஆட்சியாளர்களின் பொறுப்பு என குறிப்பிட்டார்.