டெங்கு ஒழிப்பின் பொருட்டு திறைச்சேரி ஒதுக்கியுள்ள நிதி, செலவிடப்படாமை தொடர்பில் சுகாதார அமைச்சர் தகவல் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் பிரதான செயலாளர் புபுது ஜயகொட இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கடந்த காலங்களில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
சுகாதார துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைச்சேரியில் ஊடாக வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
அவ்வாறு என்றால் டெங்கு ஒழிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, செலவு செய்த நிதி எவ்வளவு, மிகுதி தொகைக்கு என்ன ஆனது என்பது குறித்து சுகாதார அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.