ஐக்கிய தேசிய கட்சியில் 5ஆம் திகதி மாற்றம்

254 0

ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனை குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 5ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியில் மாற்றங்கள் இடம்பெறும்.

திறமைகளின் அடிப்படையில் பதவிகள் பகிர்ந்து செல்ல வேண்டும் எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.