நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தேசிய அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் – திலும் அமுணுகம

287 0

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொறுப்பு கூறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுணுகம இதனை தெரிவித்துள்ளார்.

புளத்கோபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இதற்கு கடந்த அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் நிலையில் ஆளும் அரசாங்கம் உள்ளது.

எனினும், தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே இதற்கு பொறுப்பு கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.