மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான ராமநாதன் கண்ணனை, மேல் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து விலக்குவது தொடர்பிலான 5 யோசனைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
நீதி சேவைகள் சங்கத்தின் விசேட கூட்டத்தின் போது நேற்று இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ராமநாதன் கண்ணன் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஆராயும் பொருட்டு கலந்துரையாடும் பொருட்டு, நீதி சேவைகள் சங்கத்தின் விசேட கூட்டம் நேற்று மாலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
அதன்போது அவரை நீக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு தெரிவிக்கவும், சங்கத்தின் உறுப்பினர் ஒருமனதாக தீர்மானித்தனர்.
குறித்த நியமனமானது சட்டத்தின் படி வலுவற்றது மற்றும் சட்டபூர்வ நியமனம் அல்லவென நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு கடந்த தினம் தீர்மானித்தது.
அது தொடர்பில் அந்த ஆணைக்குழு ஜனாதிபதிக்கும் அறிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.