சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 14.5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, தொடரில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில் இன்றைய தினம் 4வது இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பித்தக்கது.