தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பாகும். இந்தியாவின் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதலில், கணினியில் பயன்படுத்தப்பட்டது. அப்போது கலாநிதி விஜயகுமார் அவர்களின் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டன. கம்யூட்டர் தமிழில் ‘ரெமிங்ரன்’ முறையிலான தட்டச்சினை அறிமுகமாக்கி இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, கனடாவில் முதன் முதலாக வெளிவந்த உலகத்தமிழர் பத்திரிகை போன்றவற்றிக்கு கணினியில் உருவம் கொடுத்தவர் காலம் சென்ற விஜயகுமார் அவர்களாவர்.
கணினி எழுத்துக்களை அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ச் ஹார்ட் மூலம் உலகம் கண்டிருந்தாலும், அவற்றினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் கலாநிதி விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.