அமெரிக்க வீரர்களின் கூட்டுப்பயிற்சி முடிவுக்கு வந்தது

237 0

ஐக்கிய அமெரிக்காவின் கொம்ஸ்டொக் கப்பல் இன்று இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றது

இந்த கப்பலின் வீரர்கள் இலங்கையின் கடற்படை வீரர்களுடன் இணைந்து மனிதாபிமான கூட்டுப்பயிற்சிகளில் கடந்த ஒரு வாரகாலமாக ஈடுபட்டனர்.

மனிதாபிமானத்தை மேம்படுத்தல், அனர்த்த நிவாரண முயற்சிகளில் ஒத்துழைத்தல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் இந்த பயிற்சிபரிமாறல் அமைந்திருந்தது.

இந்தநிலையில் இலங்கையின் கடற்படையினருடன் மேற்கொண்ட பயிற்சிகள், ஒத்துழைப்பு நிகழ்வுகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக கொம்ஸ்டொக் கப்பலின் கட்டளை தளபதி பிரட்லி கோல்டி தெரிவித்தாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பயிற்சிகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப், இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் இராணுவ ஒத்துழைப்புகளின் முன்னேற்றம் நல்லிணக்கம் மற்றும் நீதிக்கான முன்னேற்றத்தை குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார்

இதன்கீழ் இரண்டு நாட்டு கடற்படை வீரர்களும் தொடர்ந்தும் ஒத்துழைப்பை அதிகரித்துக்கொள்வர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயிற்சிகளில் 323 அமரிக்க வீரர்களும்175 இலங்கை வீரர்களும் பங்கேற்றனர்.