உள்ளுராட்சி மீள்நிர்ணய யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – 55 நாட்களில் தேர்தல் அறிவிப்பு

242 0

சட்டமா அதிபரின் பரிந்துரையுடன் உள்ளுராட்சி தேர்தல் யோசனை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சிசபை மீள்நிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த பெப்ரவரி 17ஆம் திகதியன்று வெளியிடப்பட்டபோதும் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் எழுந்த பிரச்சினை காரணமாக உள்ளுராட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் சட்டமா அதிபரின் பரிந்துரை கிடைக்கப்பெற்ற நிலையில் யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

இதனையடுத்து தயார்நிலைக்காக 55 நாட்கள் தேவை என்று தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார்.

எனவே அவர் தேர்தல்களுக்கான திகதியை அறிவிப்பார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோரியுள்ளமையை பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.