வடக்கிலுள்ள இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தி போராடினார்;கள் என தெற்கிலுள்ள இளைஞர்கள் சிந்திப்பது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாளை கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் மாநாடு தொடர்பாக நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு, தெற்கு மற்றும் மலையக வாழ் இளைஞர்கள் என அனைவரையும் ஜனாதிபதி தலைமையில் ஒன்றிணைக்கின்ற வேலைத்திட்டமானது நாட்டில் இன, மத வேறுபாடுகளைக் கடந்து தூய்மையான அரசியலினை உருவாக்கும் நிகழ்வாகும் என அங்கஜன் ராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.