மெல்சிரிபுர பண்ணைக்கு சொந்தமான காணியில் விளையாட்டு மைதானம்

63 0
மெல்சிரிபுர பண்ணைக்கு சொந்தமான காணியில் விளையாட்டு மைதானம் அமைக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மெல்சிரிபுர பண்ணையில் 05 ஏக்கர் காணியில் பொது விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிப்பதற்காக இப்பாகமுவ பிரதேச சபைக்கு ஒப்படைக்குமாறு வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பண்ணையில் மெதமுல்ல பிரிவில் 05 ஏக்கர்களை ஒதுக்கி வழங்குவதற்கு தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் சபை உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த காணித்துண்டை இப்பாகமுவ பிரதேச சபைக்கு ஒப்படைப்பதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.