தற்போது வெளிநாட்டில் இருக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவருக்குச் சொந்தமான தெஹிவளை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்று சட்டவிரோத கட்டுமானம் என தெரிவித்த கடலோர காவல்படை அதிகாரிகள், பொலிஸாரின் உதவியுடன் நேற்று திங்கட்கிழமை (01 ) அதனை அகற்றினர்.
இந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றச் சென்ற அரசாங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.