புத்தாண்டு முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் கத்திகுத்துக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இவர் குறித்த நிகழ்வில் ஏற்பட்ட தகராறின் போது சமாதானப்படுத்த முற்பட்ட நிலையில் அங்கிருந்த நபரொருவர் இவரது வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.