புதிய வற் வரி திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இந்த வற் வரி திருத்தம் நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.
“வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல், எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.
அதன்படி, போக்குவரத்து துறையில் விலை உயரக்கூடும்.
அதே சமயம், பேக்கரி பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.
இது இந்நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழை மக்களையும் அதிகம் பாதிக்கலாம்.
நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரிப்பை தாங்க முடியாத சூழலுக்கு வழிவகுக்கும்” என்றார்.
இதேவேளை, வற் வரி திருத்தத்துடன், இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பமும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மாதாந்தம் 32,000 ரூபா வரி செலுத்த வேண்டியுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய முறைமை ஏற்றதல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.