காலி முகத்திடலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் மே தினக் கூட்டம்

220 0

பொதுசன முன்னணியின் இம்முறை மே தினக் கூட்டத்திற்காக கொழும்பு காலி முகத்திடலை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக பசில் ராஜபக்‌ஷ கூறுகின்றார்.

இதற்கு முன்னர் காலி முகத்திடலை வழங்க முடியாது என்று அதற்கு பொறுப்பான நிறுவனத்தினால் கூறப்பட்டதாகவும், துறைமுக அமைச்சரின் தலையீட்டினால் மீண்டும் அதனை பெற்றுக் கொள்ள முடிந்ததாகவும் பசில் ராஜபக்‌ஷ கூறினார்.

அதேவேளை இம்முறை மே தினக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுசன முன்னணியின் இம்முறை மே தினக் கூட்டத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் கலந்துகொள்ள உள்ளதாக பசில் ராஜபக்‌ஷ மேலும் கூறினார்.