சர்வதேச நாணய நிதியத்தின் தேவைப்படி, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய வரி சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக உள்நாட்டு இறைவரி தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.
அரச வரி நிர்வாகத்தை தனியார் மயப்படுத்துவதற்கான இந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் எச்.ஏ.எல் உதயசிறி கூறினார்.