கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகளில் தலையிட்டது – ரவிசெனிவிரட்ன பிரிட்டனின் ஒப்சேவருக்கு தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ச தலைமையிலான முன்னைய அரசாங்கம் நாட்டின் மிக மோசமானபயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை தடுத்தது என்ற குற்றச்சாட்டுகள் அதிகரிக்கின்றன.
அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக இந்த தாக்குதல்களை அவர்கள் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டுகளிற்கு மத்தியில் விசாரணைகளை அவர்கள் தடுத்தனர் என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்களின் போது ஆறு தற்கொலைகுண்டுதாரிகள் நாட்டின் தேவாலயங்களையும் ஐந்து நட்சத்திர விடுதிகளையும் இலக்குவைத்து எட்டு பிரிட்டிஸ் சுற்றுலாப்பயணிகள் உட்பட 269 பேரை கொலைசெய்தனர்.
எனினும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்று ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் இந்த தாக்குதல்கள் எவ்வாறு இடம்பெற்றன இவற்றை தடுத்து நிறுத்துவதில் பாதுகாப்பு தரப்பினர் எவ்வாறு தோல்வி கண்டனர் என்பது குறித்த கேள்விகளிற்கு இன்னமும் பதில்கள் கிடைக்கவில்லை.
எவருக்கு எதிராகவும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.
மாறாக முன்னர் இந்த தாக்குதல்கள் குறித்து விசாரணைகளைமேற்கொண்டவர்களும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் ராஜபக்ச அரசாங்கம் விசாரணைகளை தொடர்ச்சியாக குழப்பியது தலையிட்டது என குற்றம்சாட்டிவருகின்றனர்.
சமீபத்தில் வெளியானசனல் 4 இன் ஆவணப்படத்தில் இலங்கையில் ஸ்திரமின்மையை உருவாக்குவதற்கான – இலங்கையின் பலம் வாய்ந்த ராஜபக்ச குடும்பத்தினர் 2019ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்கான திட்டத்தின்ஒரு பகுதியே இந்த தாக்குதல் என விடயங்களை நன்கறிந்த ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற உள்ளுர் இஸ்லாமிய அமைப்பு ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த புலனாய்வு உத்தியோகத்தரை தொடர்புகொள்ள தான் உதவினார் என அவர்தெரிவித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது தடுக்கப்பட்டோம் எனஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்குறித்த விசாரணைகளிற்கு தலைமை தாங்கிய முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரவிசெனிவிரட்ண பிரிட்டனின் ஒப்சேவருக்கு தெரிவித்துள்ளார்.
எனதுஅணியினர் ஏற்கனவே இராணுவபுலனாய்வு பிரிவினருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதை உறுதி செய்திருந்தனர் என தெரிவித்துள்ள அவர் விசாரணைகளின் போது மிக உயர்மட்டத்தில் உள்ள ஒருவர் தாக்குதலை ஒருங்கிணைக்க உதவினார் என கருதுவதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ராஜபக்சஅரசாங்கம் பொறுப்பேற்றதும் செனிவிரட்ணவும் அவரது குழுவினரும் விசாரணைகளில் இருந்து மாற்றப்பட்டனர்.
20க்கும் மேற்பட்டசிஐடி உத்தியோகத்தர்கள் தனது அனுமதியின்றி மாற்றப்பட்டனர்இ700 சிஐடி உத்தியோகத்தர்களிற்கு வெளிநாட்டு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது என முன்னாள் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிஐடி உத்தியோகத்தர்களிற்கு அச்சத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் இதனால் பலர் பணியாற்றுவதற்கு அச்சமடைந்தனர் சிலர் சிஐடியிலிருந்து வேறு பிரிவிற்கு செல்வதற்காக விண்ணப்பித்தனர் என முன்னாள் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தன்னை மௌனமாக்குவதற்கான பல முயற்சிகள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளிற்கு தலைமை தாங்கிய சிஐடி அதிகாரி சானிஅபயசேகரவை கொலை செய்வதற்கான சதிதிட்டங்கள் இடம்பெற்றுள்ளன என சட்டமா அதிபர்நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளதை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை முன்னெடுப்பவர்களை இலக்குவைப்பது புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டிருந்த அபேய்சேகர ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்றதும் தீடீர் என அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
அபேய்சேகர நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை அவரை கொலை செய்வதற்கான சதிதிட்டம் குறித்த தகவல்கள்வெளியாகின.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டமையே அவரை கொலை செய்ய முயற்சிசெய்தமைக்கான காரணங்களில் ஒன்று என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனது கட்சிக்காரர் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகளில் ஈடுபட்டதே மிகப்பெரிய பிரச்சினை என தெரிவித்துள்ள அவரின் சட்டத்தரணிஉபுல் ஜெயசூரிய ஷானிஅபேய்சேகர இன்னமும் தனது உயிர் குறித்து அச்சமடைந்துள்ளார்.
அபயசேகர இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
The Observer
Sri Lanka attacks
Hannah Ellis-Petersen South Asia Correspondent