குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி வருவதால் இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் கரை ஒதுங்கி நிறைந்து காணப்படுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பாண்டிருப்பு கல்முனை சாய்ந்தமருது காரைதீவு மாளிகைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு தென்பட்டுள்ளன.
இவ்வாறான கழிவு பரவலானது கரையோர மீனவர்களது மீன்பிடி தொழிலுக்கு பெரும் சிரமங்களை கொடுப்பதுடன் வலைகளிலும் சிக்குகின்றன.
எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது .