தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊழியர்களுக்கான பிரதிபலனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சேவை பணியாளர்களின் சங்கம் கூறியுள்ளது.
55 வயது பூர்த்தியானதன் பின்னர் ஊழியர் சேமலாப நிதியத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றபோதிலும் வேறு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சமயத்தில் அதனை வழங்காதிருக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தொழில் அமைச்சர் டப்ளியூ.டி.ஜே. செனவிரத்னவிடம் அத தெரண வினவியது. இதற்கு பதிலளித்த அமைச்சர, ஊழியர் சேமலாப நிதியத்தில் எந்தவிய குறைப்புக்களும் மேற்கொள்ளப்படாது என்று கூறினார்.