13 பொலிஸ் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்

255 0

இன்றைய தினம் முதல் அமுலாகும் வகையில் 13 பொலிஸ் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 03 பெண் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் தற்போது ஆணைக்குழுவிற்கு சேவைக்கு வந்திருப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கூறியுள்ளது. அதன்படி அவர்கள் ஊழல் குற்ற விசாரணைக்கான பணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது. இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக 431 அதிகாரிகள் இருக்க வேண்டும் என்ற போதிலும் தற்போது 199 அதிகாரிகளே சேவையில் இருப்பதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.