சீனா, தெற்கு மற்றும் வட கொரியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது

109 0

உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.கிரிபேட்டியை தொடர்ந்து முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2024வது ஆண்டில் ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.கிரிபேட்டி, நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.வாண வேடிக்கையுடன் ஆஸ்திரேலிய மக்கள் புத்தாண்டை வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

.இந்நிலையில், சீனா, வட மற்றும தென் கொரியாவில் இந்திய நேரப்படி சரியாக 8.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.புத்தாண்டடை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு உரை நிகழ்த்தினார்.ஜி ஜின் பிங் தனது உரையில், ” பிரதமர் தைவானுடன் மீண்டும் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது ” என்று குறிப்பிட்டுள்ளார்.