எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபேட்கோ அறிவித்துள்ளது.
இன்று (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 366 ரூபா.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 464 ரூபா.
ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 358 ரூபா.
சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 475 ரூபா.
ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 236 ரூபா.