தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

91 0

வற் வரி அதிகரிப்புக்கு அமைய நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சகல தொலைபேசி கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கமைய தொலை தொடர்பு சேவை கட்டணம் 3 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

தொலைபேசி அழைப்பின் போது அறவிடப்படும் செஸ் வரி, தொலைத்தொடர்பு வரி, சமூக பாதுகாப்பு வரி உட்பட வரி உள்ளடங்களாக வற் வரியுடன் தொலைத்தொடர்பு சேவைக்கான வரி 38. 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 20.3 சதவீதமாக காணப்பட்ட இணைய சேவை வரி இன்று முதல் 23.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய சகல சேவைகளின் கட்டணமும் உயர்வடையவுள்ளன.

15 சதவீதமாக இருந்த வற் வரி நாளை முதல் 18 சதவீதமாக உயர்வடைய உள்ள நிலையில் தொலைபேசி கட்டணங்கள்,இணையச் சேவைக் கட்டணங்கள்,கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட இணையத்தளத்துடனான சகல சேவைகளுக்குமான கட்டணங்கள் உயர்வடையவுள்ளன.