வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசி தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இத்தாக்குதலால் வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.