சுன்னாகம் பேருந்து நிலையத்தில் கசிப்புடன் இளைஞர் ஒருவர் நேற்று (30) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 7 ஆயிரத்து 500 மில்லிலீட்டர் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைதானவர் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஆவார்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.