புத்தகங்களுக்கு கூட வற் அறவிடும் அரசாங்கம்: கஜேந்திரகுமார் காட்டம்

95 0

மாணவர்கள் வாங்கும் புத்தகங்கள் உட்பட கிட்டத்தட்ட 90 பொருட்களுக்கு வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வற் வரியானது சாதாரண மக்களுக்கு வாழ்க்கையை நடத்த முடியாத அளவு ஒரு சுமையை வழங்கவுள்ளது.

அத்துடன், ஓய்வு பெற்று ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கை நடத்துபவர்களே இந்த வற் வரியால் அதிகமாக பாதிக்கப்படவுள்ளனர் எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.