வெவ்வேறு விபத்துக்களில் நால்வர் பலி

88 0

புளத்சிங்கள தெஹிகவல பிரதேசத்தில் சிறிய ரக லொறியொன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் சிறிய ரக லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும் உயிரிழந்தனர்.

இவர்கள் புளத்சிங்கள எகல் ஓயா மற்றும் அமர கெதெர பிரதேசத்தில் வசிக்கும் 35 மற்றும் 58 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 09 வீதியின் 286 கிலோமீற்றருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் 45 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொச்சிக்கடை, தாலுகொடுவ பலகுத்துர வீதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் 72 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.