ஆஸ்கார் விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்ட பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்கின்சன் (75), நேற்று காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஹாலிவுட் நடிகரான டாம் வில்கின்சன் தி ஃபுல் மான்டி, ஷேக்ஸ்பியர் இன் லவ் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்ற டாம் வில்கின்சன் 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இரண்டு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், பாஃப்டா, எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்