ஒரு மாதத்தில் பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்கள் டிசம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 30 நாட்களில் மட்டும் 11,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 87,570 ஆகும்.
அதில் கொழும்பு மாவட்டத்தில் 18,517 பேர் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, நாடு முழுவதும் டெங்கு அதிக ஆபத்துள்ள 62 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 55 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.