இளைய சகோதரனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த நபர் கைது

88 0
கல்னெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற மோதலில் இளைய சகோதரனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மூத்த சகோதரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அவுக்கண பிரதேசத்தை சேர்ந்த லலித் சந்திரகுமார என்ற 46 வயதுடைய முன்னாள் கடற்படை வீரராவார்.

இவர் கடற்படை முகாமில் கடமையாற்றும் காலத்தில் இடம்பெற்ற விபத்தொன்றினால் ஊனமுற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், இரு சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரன் இளைய சகோதரனின் தலையில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்து தரையில் வீழ்ந்தவரை மூத்த சகோதரன் மீண்டும் பலமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

இது தொடர்பில் இவர்களது தாயாரிடம் பொலிஸார் விசாரிக்கையில், தனக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் இரண்டாவது மகன் திருமணமாகாதவர் எனவும் சகோதரர் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் மூத்த சகோதரன் இளைய சகோதரனை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

கைதான சந்தேக நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச்செல்ல முற்பட்டபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.