சய்டம் குறித்த இறுதித் தீர்மானம் வரும் திங்கட்கிழமை

307 0

சய்டம் தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட இருந்த எதிர்ப்பு நடவடிக்கை சம்பந்தமான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை எடுக்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இந்த விடயம் கூறப்பட்டது.சுகாதார அமைச்சர் ராஜீத சேனாரத்னவுக்கு நீண்ட கால சுகாதார சேவையின் குறைந்த தரம் என்னவென்பது சம்பந்தமாக தெரிந்து கொள்ளும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு கேட்டுக்கொண்ட போதிலும் அவர்கள் வேண்டுமென்றே புறக்கணித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.